இந்தியாவின் டெல்லியில் காதலியை கொலை செய்துவிட்டு, தொலைக்காட்சி நாடக பாணியில் தப்பிக்க முயன்ற இளஞரை பொலிசார் சாமர்த்தியமாக கைது செய்துள்ளனர்.
டெல்லி குதுப் விஹார் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சதீஷ் குமார். இவருடன் குருகிராம் பகுதியில் பணியாற்றும் திஷு குமாரி என்பவரே கொல்லப்பட்டவர்.
மனைவியும் ஒரு குழந்தைக்கு தந்தையுமான சதீஷ் குமார், கடந்த 2017 முதல் திஷு குமாரியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் குதுப் விஹார் பகுதியில் வாடகை குடியிருப்பு ஒன்றில் தங்கி வந்துள்ளனர்.
பூட்டிய நிலையில் இருந்த குடியிருப்பில் இருந்து அழுகிய வாடை வெளியானதை அடுத்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் முன்னெடுத்த சோதனையில் திஷுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பாதி அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு கெமரா பதிவுகளை ஆய்வு செய்த பொலிசார், சதீஷ் மீது சந்தேகம் கொண்டனர்.
தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று சதீஷ் அசாமில் உள்ள ஒரு நண்பரிடம் பேசியதும் பொலிசாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து அசாம் விரைந்த பொலிசார், திப்ருகட் பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் இருந்து கைது செய்துள்ளனர்.
திஷுவின் நட்பு வட்டத்தை காரணமாக கூறி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார் சதீஷ்.
செப்டம்பர் 23 அன்று குதுப் விஹாரில் உள்ள வாடகை குடியிருப்புக்கு வந்த இருவரும், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ் குமார் திஷுவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் திஷு குமாரி மரணமடைந்துள்ளார்.
தொடர்ந்து படுக்கையிலேயே அவரை படுக்க வைத்து போர்வையால் மூடிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
பின்னர் தமது மொபைல்போனை விற்றுவிட்டு, திஷுவின் மொபைலையும் சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து ஆக்ரா சென்ற சதீஷ், அங்கிருந்து அசாம் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.