ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளனர்.
ஆக்ஸ்பர்க்கில் நடைபெற்ற கட்டுமான பணியின் போது, இரண்டாம் உலகப் போரில் அந்நாட்டின் மீது வீசப்பட்ட குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய முடிவெடுத்த ஜேர்மனி அதற்கான நாளை கிறிஸ்துமஸ் தினமாக தேர்ந்தெடுத்தது.
விடுமுறை நாளான அன்று தான் மக்கள் வீடுகளில் இருப்பர், போக்குவரத்து குறைவாக இருக்கும் என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்பகுதியில் இருந்த சுமார் 54,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதன் பின்னர் ஜேர்மன் நிபுணர்கள் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலழிக்க செய்துள்ளனர்.
சுமார் 1.8 டன் எடை கொண்ட அந்த குண்டு பிரிட்டிஷ் படைகளால் வீசப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.