நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் என ஐவர் (ஒரு கைக்குழந்தை, ஒரு 4 வயது குழந்தை, இரு 13 வயது சிறுவர்கள், மற்றும்
வயதான ஒரு பெண் (தாக்குதல் நடத்தியவரின் மனைவி)) இறந்த நிலையிலும் மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் நினைவற்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் துரிதமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாக்குதல் நடாத்திய நபர் தன் மனைவியையும் இரு பிள்ளைகளையும் சுத்தியால் அடித்து கொன்றுவிட்டு தனது தங்கையையும் அவரது கணவரையும் அவசரமாக வைத்தியசாலை செல்லவேண்டும் வாருங்கள் என தொலைபேசியில் அழைக்க தங்கையும் தனது நான்கு பிள்ளைகளுடன் கணவரையும் கூட்டிக்கொண்டு அங்கு செல்ல அவர்கள் மீதும் கொடூரமாக தாக்கி இரு குழந்தைகளை கொலை செய்தும் தங்கையையும் கணவரையும் தாக்க மற்ற இரு குழந்தைகளும் தப்பி வெளியே ஓடி உள்ளனர்.
இப்படி ஒரு பயங்கரமான குடும்ப வன்முறையை இதுவரை பிரான்சில் பார்க்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
“சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது, எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” பிரான்சில் இப்படி ஒரு கொடூர சம்பவம் இடம் பெற்றது இதுவே முதல் முறை என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் தன்னை தானே தாக்கியதில் சம்பவ இடத்தில் நினைவை இழந்து ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், அவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினர்.
சம்பவத்தை பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு நபரால் நடத்தப்பட்டதாக நம்பமுடியவில்லை என்றும், விசாரனை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியதாக படுகாயமடைந்த சிறுவனால் குற்றம் சாட்டப்பட்ட அவரின் மாமனார் கோமாவில் இருந்து மீண்டால் மட்டுமே 100% உண்மையான தகவல் வெளிவரும் என மேலும் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இருகுடும்பமும் காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று கைக்குழந்தையை இந்து முறைப்படி வித்து வாக்கும் வழிபாட்டால் ஈடுபட்டு இரு குடும்பங்களும் (அண்ணன், தங்கை) மிக மகிழ்ச்சியாக ஒரு பிரச்சனையும் இன்றி இருந்ததாக கூறப்படுகிது.
இக்குடும்பங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இதுவரை ஒரு சிறிய தகராறையோ சத்தத்தையோ தாம் கண்டதில்லை எனவும் மிகச்சிறப்பாக வாழ்ந்துவந்ததாகவும் அருகில் வசிப்பவர்களும் கடைக்காரர்களும் கூறி உள்ளனர்…
குடும்பத்தை சுத்தியலால் தாக்கி கொலை செய்த நபர், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்றும், அவர் கடும் மன நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் பிள்ளைக்கு காது குத்து வைத்த வேளையில், முதலில் தனக்கு குத்துங்கள், வலி தாங்க முடியும் என்றால் தான் பிள்ளைக்கு குத்த விடுவேன் என்று அடம்பிடித்த தந்தை, ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை என்கிறார்கள் அயலவர்கள்.