ATM அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடி செய்த பிரதான தரப்பு சந்தேகநபர்கள் இருவர் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை, மடபாத்த மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ATM இயந்திரங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளதாக தனியார் வங்கி ஒன்றினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 41 கிராம் ஹேரோயின் போதைப்பொருள், துப்பாக்கிகள் இரண்டு, தோட்டாக்கள் மற்றும் 192 ஏ.டீ.எம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்களினால் விசேட தொழில்நுட்பத்துடன் ஏ.டீ.எம் இயந்திர தரவுகள் திருடப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த தரவுகளை ATM அட்டைகளில் உள்ளடக்கி பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தறை, மிரிஸ்ஸ அம்பலாந்தோட்டை, பிலியந்தலை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களில் 29 முதல் 33 வயதிற்குட்பட்டவர்களே இந்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கும் உத்தரவிற்கமைய அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.