Loading...
காங்கோ நட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நந்தே என்ற இனத்திற்கும், ஹது என்ற இனத்திற்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் நாளான நேற்று இந்த இரண்டு இனக்குழுவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் நந்தே குழுவினரைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர்.
Loading...
பின்னர் ராணுவம் அந்த இடத்திற்கு விரைந்து சண்டையை முடிவுக்கு வந்ததாக உள்ளூர் அதிகாரி அல்போன்ஸ் மஹோனோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சண்டையில் 30 ஹது இன மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...