சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டகாரர் நஜீப் தாராகை (29) மரணமடைந்தார். இச்செய்தி ஆப்கான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இச்செய்தியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது. அக்டோபர் 2ம் திகதி தாராகை கார் விபத்தில் பலத்த காயமடைந்தார் என்றும் பின்னர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை ட்வீட் செய்திருந்தது.
அவர் நங்கர்ஹாரில் சிகிச்சை பெற்று வந்த தாராகை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல ர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தாராகை கடைசியாக கிரிக்கெட்டில் தோன்றியது கடந்த மாதம் ஷ்பகீசா பிரீமியர் லீக்கில் மிஸ் ஐனக் நைட்ஸ் அணிக்காக, அதில் அவர் 32 ரன்கள் எடுத்தார்.
அவர் ஆப்கானிஸ்தானுக்கு 12 டி-20 மற்றும் 1 ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
2014 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில் சர்வதேச அளவில் அறிமுகமான தாராகை, பின்னர் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, வங்க தேசம் மற்றும் ஹாங்காங்கிற்கு எதிராக விளையாடினார்.
மார்ச் 2017-ல் அயர்லாந்திற்கு எதிரான டி-20 போட்டியின் போது தாராகை 90 ரன்கள் அடித்தார், அதுவே அவர் சர்வதேச அளிவில் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.
தாராகை 24 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 47.20 சராசரியாக 2030 ரன்கள் எடுத்தார். அவர் ஆறு முதல் வகுப்பு சதங்களையும், பத்து அரைசதங்களையும் அடித்துள்ளார்.