Loading...
நமக்கு ஏற்படக்கூடிய பெரும் அசௌகரியங்களில் ஒன்று கண் அரிப்பு. இது பொதுவாக தூசி, மாசு, தூக்கம் வருவது அல்லது கண் தொற்று போன்றவற்றால் ஏற்படக்கூடும். .
வறண்ட கண்கள், கண் எரிச்சல் அல்லது தூசி விழுந்ததால் ஏற்படக்கூடிய அரிப்பு போன்றவற்றை சரியான நேரத்தில் முறையாக கவனித்தே ஆக வேண்டும்.
இன்னும் சில சமயங்களில், அலர்ஜியால் கூட கண்களில் அரிப்பு ஏற்பட்டு, பின்னர் கண் சிவந்து, வீங்குவதற்கும் வாய்ப்புள்ளது.
Loading...
அதிலும் கண் அரிக்க தொடங்கினால், வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். இதனை எளிய முறையில் போக்க ஒரு சில இயற்கை பொருட்கள் உதவி புரிகின்றது.
அந்தவகையில் தற்போது அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- கண் அரிப்பு தருணங்களில், ஒரு சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் நனைத்து கண்களின் மீது வைக்க வேண்டும்.
- ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஜஸ் கட்டி துண்டு மற்றும் ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்சியில்அடித்துக் கொள்ளவும். தயார் செய்ய கலவையை ஒரு பவுளில் ஊற்றி கொள்ளவும். சிறிது பஞ்சில் தயார் செய்ய குளிர்ந்த கற்றாழை கலவையை தொட்டு, கண்களின் மீது வைக்கவும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க, உடனடி பலன் கிடைக்கும்.
- சரிசம அளவில் குளிர்ந்த பால் மற்றும் ரோஸ் வாட்டரை எடுத்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை, சிறிது பஞ்சில் தொட்டு கண்களின் மீது வைத்திருக்க, கண் அரிப்பு உடயே நீங்கி விடும்.
- கண் அரிப்பால் அவதிப்படுபவர்கள், சீமைச்சாமந்தி தேநீர் தயாரித்து, பயன்படுத்திய தேநீர் பையை உறை குளிர் நிலையில் வைக்கவும். பின்னர், அதனை எடுத்து கண்களின் மீது வைக்க கண் அரிப்பு போய்விடும்.
- ஒரு கப் தண்ணீரில், ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பெருஞ்சீரக நீரை தயார் செய்து கொள்ளவும். தயாரித்த கலவை நன்கு ஆறி, குளிர்ந்த நிலைக்கு வந்த பிறகு, அந்த நீரை கொண்டு கண்களை கழுவவும்.
- ஒரு பாத்திரத்தில், அரை கப் தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், அந்த நீரை குளிர வைக்கவும். இப்போது, குளிந்த நீரை கொண்டு கண்களை கழுவவும். மாற்றாக, தயாரித்த நீரில் சில துளிகளை கண்களுக்குள் நேரடியாகவும் விட
Loading...