ஆடையலங்காரத்தில் முக்கியமான ஒரு பகுதியாக காலணிகள் இருக்கின்றன. காலணிகள் உங்களுடைய பாதங்களை குப்பைகளிலிருந்து காப்பாற்றியும், மோசமான தரைப்பகுதிகளில் பாதுகாத்தும் வந்தாலும் உங்களுடைய ஸ்டைலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை யாராலும் மறுக்க முடிவதில்லை.
வாங்கினோமா… அதை, பல வருடங்கள் போட்டு கிழித்து, பின் புதுச் செருப்பு வாங்கச் சென்ற கடையில், கிழிந்த செருப்பைக் காட்டி, இதே செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி, நடந்து பார்த்து, திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.
பெண்களுக்கான காலணி வகைகள் தற்போது நவீன வடிவில் சந்தைக்கு வந்துள்ளன. பெண்கள் விரும்பும் வகையில் மிகவும் நளினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன.
கொஞ்சம் அழகான வடிவில் காஸ்ட்லியாகவும் கிடைக்கும். இவை ஆயிரத்து முந்நூறு ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகின்றன.
செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி நடந்து பார்த்து திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலை ஏறிப்போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரீகக் காலம் இது.
எந்த எந்த காலணிகளை எப்போது அணிய வேண்டும் எவற்றை அணியக் கூடாது என்பதையும், வாங்கும் காலணிகளில் எது உங்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதையும் முதலில் தெரிந்து கொண்டு பின்பு உங்களுக்குப் பிடித்த சரியான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
பிளாஸ்டிக் செருப்பு
பிளாஸ்டிக் செருப்புகளைவிட, தோல் செருப்புகளும், ஷுக்கலுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு அடைவதோடு, அதிக வியர்வை வெளியேறி, கண் எரிச்சல் ஏற்படும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்ப்பது நல்லது.
செருப்பு மற்றும் ஷுக்கள்
எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷுக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா என பார்த்து அணிய வேண்டும். செருப்பு மற்றும் ஷுக்களை அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது செருப்பில் இருக்கும் ஈரத்தன்மையும் நீங்கி விடும்.
ஹை ஹீல்ஸ்
எல்லா பெண்களும் அணிய விரும்பும் ஒன்று ஹை ஹீல்ஸ் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இது உங்களை மிகக் கவர்ச்சியுடன் காட்டும் ஒன்று தான் ஆனால் அதை விடப் பெரிய பிரச்சனைகளையும் ஹை ஹீல்ஸ் கொண்டுள்ளது. ஹை ஹீல்ஸ் அணிவதால் நரம்பு பாதிப்பு, கால் விரல் நகப் பாதிப்புகள் மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பிளாட் ஷூ
இந்த பிளாட் ஷூ உங்கள் பாதத்தின் மேற்பகுதியில் எந்த வித பிடிப்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதால் அந்த இடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு மூட்டுவலி அல்லது முதுகுவலி ஏற்படலாம். இதற்காக நீங்கள் பிளாட் ஷூ அணிய வேண்டாம்
சியாட்டிகா
சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.
கவனம்
- காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
- இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.
- குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.
- தரையில் வழுக்காத செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
- தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை. பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.