கொரோனா நெருக்கடி பிரித்தானியாவில் மக்களின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வேலையின்மை கொரோனா ஏற்படுத்தியுள்ள பிரதான பிரச்சனையாகும். இந்நிலையில் இன்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரத்தானிய பிரதமருமான போரிஸ் ஜான் கட்சி மாநாட்டில் சில புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக 2030க்குள் 40 புதிய மருத்துவமனைகள் கட்டமைக்கப்படும் என்றும், இதன் மூலமாக 50,000 செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தற்போது ஜான்சன் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காற்றாலை மின் உற்பத்தி குறித்தும் அதன் மூலமாக புதியதாக 60,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், காற்று மாசினை குறைக்கவும் சில திட்டங்களை இன்று காலை அறிவித்திருந்தார்.
தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுடன் பிரத்தானியா உலக நாடுகள் வரிசையில் 12வது இடத்தில் உள்ளது.
இதுவரை 32,317 பேர் உயிரிழந்துள்ளனர். இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியையும் கோபத்தினையும் உண்டாக்கியிருந்ததன் அடிப்படையில் இந்த திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த திட்ட அறிவிப்புகள் நாட்டு மக்களிடையே புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.