2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், அடுத்து ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் களம் காண உள்ளதாக தெரிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்பது குறித்துப் பேசினார். அப்போது, தனக்கு முதல்வராகும் விருப்பமில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்ட உடன் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் புதிய கட்சி 2021 பிப்ரவிர மாதத்தில் தொடங்கப்படும் எனவும், தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கட்சி குறித்து அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.