அம்பாறை மாவட்டத்தின் மஹஓயா பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட இத்தபொல என்ற கிராமத்தை இன்று மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி விடுமுறைக்கு வந்திருந்த நிலையில், அவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மஹாஓயா இத்தபொல கிராமத்தில் இந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள 5 வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கிராமம் மூடப்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ளவர்கள் வெளியில் செல்லவும் வெளியார் உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மஹாஓயா சுகாதார சேவைகள் அதிகாரி தர்ஷிகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.