மனைவியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜமுருகனுக்கும் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களில், மனைவியிடம் வரதட்சணை கேட்டு ராஜமுருகன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட சண்டையில் தற்போது அந்த பெண், தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜமுருகன், தனது மனைவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பதுங்கியிருந்த ராஜமுருகனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.