பிரித்தானியா விமானநிலையத்தில் தரையிரங்கிய நபரை சோதனை செய்ததில் அவர் சுமார் 99 பைகள் கொண்ட போதைப் பொருட்களை விழுங்கி கடத்த முயற்சி செய்திருப்பது எக்ஸ் ரே சோதனையில் தெரியவந்ததையடுத்து, தற்பொது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் Sao Paolo-ஐ சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க Jean Da Silva Oliveira என்ற 22 வயது இளைஞர், கடந்த 5-ஆம் திகதி பிரித்தானியாவின் Heathrow விமானநிலையத்தில் தரையிரங்கியுள்ளார்.
அப்போது அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர், பிரித்தானியாவிற்கு வருவது என்னுடைய கனவு எனவும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக லண்டனில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகவும், மார்ச் மாதத்தில் தனக்கான டிக்கெட்டை வாங்கியிருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், அவருடைய டிக்கெட்டை பரிசோதித்த போது, மூன்று நாட்களுக்கு முன்னர் தான் அந்த டிக்கெட் வாங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை அதிகாரிகள் எக்ஸ்-ரே மூலம் சோதனை செய்த போது, A ரக போதை மருந்து கொண்ட 99 பைகள் விழுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் எடை சுமார் 1.18 கிலோ எடை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த போதைப் பொருட்கள் அனைத்தையும் வெளியேற்ற அவர் காவலில் வைக்கப்பட்டார். அதன் பின் கடந்த 10-ஆம் திகதி ஆக்ஸ்பிரிட்ஜ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் A வகை போதை பொருட்கள் கடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார், இதையடுத்து, வியாழக்கிழமை ஐஸ்லெவொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
விசாரணைக்கு தலைமை தாங்கிய தேசிய குற்றவியல் அமைப்பின் (என்.சி.ஏ) செயல்பாட்டு மேலாளர் இயன் ட்ரூபி, சட்டவிரோத மருந்துகள் தான் வன்முறைக் குற்றங்களுக்கு காரணமாக அமைகின்றன.
எனவே, இதன் காரணமாக பிரித்தானியாவில் போதைப் பொருள் கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுகிறோம்.
கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கும் தடைசெய்யப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்டுபிடிக்க எல்லைப் படை அதிகாரிகள் ஹைடெக் தேடல் கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.