காலையில் தூங்கி எழுந்தவுடன் பலரும் தேடுவது செல்போனை தான்.
போனை எடுத்து மெசேஜ், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற செயலிகளை பார்த்த பின்னர் அடுத்த வேலையை செய்ய பலரும் துவங்குவர்.
அந்தளவுக்கு செல்போன்கள் நம்மை ஆக்கிரமித்து விட்டது என கூறினால் அது மிகையாகாது!
காலையில் எழுந்தவுடன் செல்போனை பார்ப்பதால் அது உடலுக்கும், மனதுக்கும் பிரச்சினை மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
செல்போனில் நல்ல செய்தி மட்டுமே கிடைப்பதில்லை, கெட்ட செய்திகளும் கிடைக்கிறது. இதனால் நம் உடல் மட்டும் அல்ல மனதும் பெரிய அளவில் பாதிப்படைகிறது.
காலை எழுந்தவுடன் ஸ்மார்ட்போன் உபயோகித்தால், நாம், நமது இயல்பான வாழ்க்கையில் இருந்து சற்று தடுமாறுகிறோம் என்று அர்த்தம்.
நேற்று என்ன நடந்தது, நாம் தூங்கும் போது என்ன நடந்தது, இன்று என்ன நடக்கப்போகிறது, யார் என்ன பேசுகிறார்கள், யார் என்ன போட்டோ போஸ்ட் செய்துள்ளார்கள். என்று நம் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது,நம் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வதை பலரும் ஒரு காலை கடனாக செய்துவரும் வேளையில் அதற்கு நேரெதிராக இது அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
நம் அமைதிக்கு குந்தகம் விளைவித்து நம் மனதை இறுக்கமாக்கி அன்றைய நாளையே சீர்குலைக்கும் வேலைகளையும் சில சமயம் செய்துவிடுகிறது
நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட சந்தோஷமாக இருப்பது போல் சில போட்டோக்களை போஸ்ட் செய்வதால் நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் நம்மில் ஒரு நெகட்டிவ் எனர்ஜியை உண்டு செய்கிறது. நமது தன்னம்பிக்கையை குறைக்க செய்கிறது.
உங்களுடன் படித்த நண்பர்கள் உங்களை விட சுமாராக படித்தவர்கள், உங்களைவிடச் சிறப்பாகப் படித்தவர்கள் எனப் பலரும், சமூக வலைத்தளங்களில் இருப்பார்கள் அவர்களில் ஒரு சிலர் வசதியாகவும் இருப்பார்கள், அவர்களில் சிலர் சந்தோசமாக ஊர் செல்வது, கார் வாங்குவது புதிய வீடு வாங்குவது என்பதைப் போட்டோ எடுத்து போஸ்ட் செய்வார்கள், அதை நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் உள் மனது நீங்கள் வாழ்க்கையில் தோற்றவர்கள் என்ற தவறான பிம்பத்தை உண்டு செய்யும்.
அதனால் சில மன ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். இதனால் நமது இயல்பு வாழ்க்கை பாதித்துச் செல்லவேண்டிய பாதையிலிருந்து தடுமாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.