கொரோனா தொற்று காரணமாக இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையதிதல் தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்கள் எழுவர் இன்று தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே புலமைப்பரிசில் பரீட்சையை எழுத பிரத்தியேக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தென் பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் இருந்து மாணவர்கள் எழுவர் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தனர்.
இதனால் குறித்த மாணவர்கள் 7 பேரும் கிளிநொச்சி பரீட்சை நிலையம் ஒன்றில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே பரீட்சையை எழுதுவதற்கு பிரத்தியே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருவி இணையத்திற்கு தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர்கள் எழுவரில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்தே இவ்வாறு திடீரென தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.