ஹட்டன்-நுவரெலிய பிரதான வீதியின் நானுஓயா பாமஸ்டன் தோட்டத்திற்கு அருகில் டிப்பர் ரக பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் சாரதியின் உதவியாளர் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் தலவாக்கலையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் ரக பாரவூர்தி வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்போது நுவரெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த பாரவூர்தி அதிக வேகத்துடன் பணித்துள்ளதன் காரணமாக இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்