பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள காவல் நிலையத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு சுமார் 40 அடையாளம் தெரியாத நபர்கள் உலோக கம்பிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்தி பாரிஸ் புறநகரில் உள்ள காவல் நிலையத்தை தாக்கினர்.
நேற்று இரவு Champigny-ன் காவல் நிலையத்தில் ஆயுதங்கள் மற்றும் பட்டாசுகள் மூலம் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பொலிஸ் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்று பாரிஸ் பொலிஸ் தலைமையகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
காவல் நிலையத்தை நோக்கி பட்டாசுகள் வீசப்படுவதைக் காட்டும் வீடியோவை காவல்துறை வெளியிட்டது.
ஆயுதமேந்திய மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர், ஆனால் நுழையவில்லை.இத்தாக்குதலில் வாகனங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தது. இதுதொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. தாக்குலுக்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.