பிரதமர் ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த பின்னர் வெளியிட்ட கருத்துக்களை துறவிகள் குரல் அமைப்பு விமர்சித்துள்ளது.
துறவிகள் குரல் அமைப்பு நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முரத்தொட்டுவே ஆனந்த தேரர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நாட்டின் மாநாயக்க தேரர்கள் தர்ம போதனை வழங்க மாத்திரமே உள்ளனர் என்ற உணர்வுடனேயே நாட்டு பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
இதனால், மாநாயக்க தேரர்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநாயக்க தேரர்களை சல்லி காசுக்கு மதிக்காது தர்ம உபதேசம் செய்ய நீங்கள் இருக்கின்றீர்கள் என தொனியில் பிரதமர் பேசியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருந்த கருத்தை நாங்கள் முற்றாக கண்டிக்கின்றோம்.
இதனால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு பொருத்தமானவர் அல்ல, அவர் திரைப்படத்தில் நடிக்கவே தகுதியானவர் என்பதையே எங்களால் தற்போது கூற முடியும் என முருத்தொட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.