Loading...
தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
எந்த இடையூறுமின்றி அனைத்து விமானங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலைய ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
இதேவேளை, இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் ஏவுகணைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமையினால் இன்று காலை விமான சேவைகள் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டிருந்தன.
மேலும், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான விமானங்களே தாமதமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Loading...