நாட்டை லொக்டவுன் செய்வதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முழுமையாக அடைப்பதற்கு எவ்வித தீர்மானமும் அரசாங்கத்தின் தரப்பில் எடுக்கப்படவில்லை.
லொக்டவுன் செய்யும் அளவிற்கான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை. நோயாளிகளை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நோயாளிகள் அதிகரிக்கும் பகுதிகளில் மாத்திரம் பயண கட்டுப்பாடு விதிப்பதற்கு இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களாக நாட்டில் கொரோனாவை பரப்பாமல் வாழ்வதற்கு இந்த நாட்டு மக்கள் பழகியுள்ளனர். இதனால் நாட்டை லொக் டவுன் செய்ய வேண்டியதற்கான அவசியம் ஒன்று ஏற்படவில்லை.
பொது மக்களின் உதவியே மிகவும் முக்கியம். முகக் கவசம் அணியாமல் செல்பவர்களை பார்த்தால் மக்கள் எதிர்ப்பு வெளியிட பழகிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.