Loading...
திருகோணமலையில் ஆள் மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் இன்று(13) கைது செய்துள்ளனர்.
Loading...
இதில் வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நாளை (14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
Loading...