Loading...
நாம் அன்றாடம் பலகையில் வைத்து காய்கறிகளை நறுக்கும் போது, ஒருசில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும்.
Loading...
- இறைச்சி மற்றும் காய்கறிகளை நறுக்குவதற்கு, ஒரே பலகையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறைச்சியிலிருந்து உருவாகும் சால்மோனெல்லா, ஈகோலை போன்ற நுண்கிருமிகள் பலகையிலேயே தங்கிவிட அதிக வாய்ப்புள்ளது. இதனால் தொற்று நோய்கள், மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- காய்கறி நறுக்குவதற்கு, மரப்பலகையை பயன்படுத்தி விட்டு, கழுவாமல் வைக்காமல், அதை உடனடியாக சமையல் சோடாவை பயன்படுத்தி, கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். இதனால் அந்த பலகையில் இருந்து நாற்றம் ஏற்படாமல் சுத்தமாக இருக்கும்.
- காய்கறி பலகையை கழுவியதும் நன்றாக உலர வைக்காமல் இருந்தால் அதில் கிருமிகள் தங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அதை நன்றாக கழுவியதும், உலர வைத்த பின்பே மீண்டும் பயன்படுத்த வேண்டும். இதனால் அதில் கிருமித் தொற்றுக்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
- நாம் காய்கரிகளை நறுக்கும் போது, பலகையில் வெட்டுக்கள் ஏற்பட்டு, அதில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே பலகையில் வெட்டுக்கள் விழாமல் தடுப்பதற்கு, பலகையில் எண்ணெய் தடவி, சில நிமிடங்களுக்குப் பின் உலர்ந்ததும் நறுக்க வேண்டும்.
Loading...