யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். கடன் தொல்லைகள் குறையும்.
நன்மைகள் நடைபெறும் நாள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கனவுபலிதம் உண்டு. பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர் பகை மாறும். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை கூடும்.
அஞ்சல் வழியில் ஆச்சர்யமான தகவல் வந்து சேரும் நாள். புதிய மனை கட்டிக்குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்துதவுவர். திருமண முயற்சி வெற்றி தரும்.
செயல்பாட்டில் வெற்றி கிட்டும் நாள். செல்வநிலை உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
ஆசைகள் பூர்த்தியாகும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரும். சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க பிரபலமானவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
முன்னேற்றம் கூடும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர்.
பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். அதிகாரிகளை அனுசரித்ததுச் செல்வது நல்லது. உடல் நலத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டு அகலும். பயணத்தால் பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.
சுபச் செலவுகள் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திருப்பம் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடக்க முற்படுவீர்கள். இறைவழிபாட்டுச் சிந்தனை மேலோங்கும்.
வசதி வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ள முயற்சி எடுக்கும் நாள். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். வெளிநாட்டுப் பயணம் எண்ணிய படியே கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் மடல் மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடியும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.