Loading...
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம நபரிடமிருந்து வந்த வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள Kazansky, Leningradsky மற்றும் Yaroslavsky ரயில் நிலையங்களிலிருந்து 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பின்னர், மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading...
முன்னதாக, 92 பேருடன் சிரியாவிற்கு பயணித்த ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...