உகாண்டாவின் மேற்கு பகுதியில் உள்ள அல்பெர்ட் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து நேற்று (26) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 30 பேர் மூழ்கியதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மூழ்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களுடைய ரசிகர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று நட்பு முறையிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அந்த படகில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் இருந்ததாகவும், மேளததாளங்கள் மற்றும் விசிலடித்து பாட்டுப்பாடியபடி சென்று கொண்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அமைதியான நதியில் படகு கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆல்பெர்ட் நதியில் இதுபோன்ற விபத்துகள் சகஜமான ஒன்றாகும்.
பெரும்பாலும் அளவுக்கதிமான ஆட்களை ஏற்றிச் செல்வதாலும், படகுகள் முறையாக பராமரிக்கப்படாத்தாலும் இத்தைகய விபத்துக்கள் நடக்கின்றன.