தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சுதந்திரக் கட்சியுடன் இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர்கள் அதிருப்தி வெளியிடுவதாகவும் அறியமுடிகின்றது.
எனவே, வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த முறுகல் நிரந்த முடிவுக்கு வரவில்லை என்றால், கட்சியின் கீழ் மட்டத்திலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.