சென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த சையத் இப்ராஹீம், ராயபுரம் மேம்பாலம் அருகேயுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சையத் இப்ராஹீமுக்கும், அவரது மனைவி நிசாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நிஷாவிற்கு அவரது சகோதரியின் மகன் அசாருதீன் மருத்துவ தேவைகள் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இப்ராகிம், நேற்று இரவு அசாருசீனிடம் தகராறு செய்துள்ளார். இதானல் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த இப்ராகிம், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து. அசாரூதினை சுட்டுள்ளார். இதில் அசாருதின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த ராயபுரம் போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அசாருதினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.