நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும், நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
டெங்கு நோய் ஏற்படக்கூடிய பிரதேசங்களை கண்டறிந்து அவ்வாறான இடங்களை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு நுளம்பு பிரச்சினை காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடுத்த தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்க முன்னதாக பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உள்ளிட்ட 640 பேரைக் கொண்ட குழுவினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் டெங்கு நோயினால் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 49930 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.