கொரோனா பெருந்தொற்று தொடர்பில் முதன் முறையாக கணித்த பிரபல பிரித்தானிய பெண் ஜோதிடர் ஒருவர், அடுத்த ஆறு மாதங்களில் நடக்கவிருக்கும் உலகின் முக்கிய சம்பவங்கள் குறித்து தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய ஜோதிடரான ஜெசிகா ஆடம்ஸ் கடந்த 2019 பிப்ரவரி மாத துவக்கத்திலேயே, கொரோனா பெருந்தொற்று உலகம் மொத்தமும் பரவி 2020 ஆம் ஆண்டு முழுவதும் பெரும் சேதத்தை விதைக்கும் என தமது கணிப்பை வெளியிட்டவர்.
மட்டுமின்றி, சீனாவின் வுஹான் நகரில் கொரோனாவுக்கு முதல் பலி ஜனவரி 10 ஆம் திகதி நிகழ்ந்தது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா மருந்து:
தற்போது அவர், எதிர்வரும் ஆறு மாதங்களில் உலகின் முக்கிய நபர்கள் தொடர்பில் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா பெருந்தொற்று தொடர்பான மருந்து வெளியாகும் என்றாலும், அது எதிர்பார்த்த பலனை அளிக்காது என்றும்,
கொரோனா பெருந்தொற்றுடன் வாழப்பழகுவதே சிறந்தது எனவும், இன்னும் சில காலம் கொரோனா பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி- மேகன்
ஜெசிகாவின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டு இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றும், அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்பும் உள்ளதாக கணித்துள்ளார்.
இருப்பினும் வில்லியம்- கேட் தம்பதிகளுடனான ஹரி- மேகன் தம்பதிகளின் உறவு என்பது எந்த முன்னேற்றவும் இன்றி காணப்படும் என்கிறார்.
அமெரிக்க தேர்தல்:
அமெரிக்க தேர்தலில் இந்த முறை குடியரசு கட்சி ஆட்சியை தக்கவைக்காது என கணித்துள்ள ஜெசிகா, பெண்ணியவாதம் மற்றும் சம உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கருத்துக்கணிப்புகளில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரே முன்னணியில் இருந்து வருகிறார் என்றாலும், 2016-ல் டொனால்டு டிரம்ப் வென்றது போன்ற ஒரு நிலை உருவாகும் வாய்ப்பையும் மறுப்பதற்கு இல்லை.
பிரெக்சிட்
பிரெக்சிட் தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தையை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தாமதப்படுத்துவார் என கூறும் ஜெசிகா,
தற்போது இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகி வருவதாக கணித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டில் ஒருகட்டத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை கைவிடும் சூழலும் உருவாகலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும், நிரந்தரமான ஒரு தீர்வை அது எட்டும் எனவும் ஜெசிகா கணித்துள்ளார்.