மியான்மாரில் சிறுமிகள் தங்கள் முகம் முழுவதும் பச்சைக் குத்தி கோரமாக்கிக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
மியான்மாரின் உயர் மலைகளில் வாழும் சின் பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுமிகளே இச்செயலலில் ஈடுபட்டுள்ளனர்.
12 முதல் 14 வயதிற்குள்ளான சின் பழங்குடி சிறுமிகள் முகம் முழுவதும் துடி துடிக்க பச்சை குத்திக் கொண்டுள்ளனர். முகம் முழுவதும் குத்தி முடிக்க சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
புராணத்தின் படி, பண்டைய மன்னர் தான் விரும்பும் பெண்களை கடத்தி வைப்பாட்டியாக வைத்து கொண்டுள்ளார்.
இதிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவே சின் பழங்குடி பெண்கள் சிறுவயதிலே முகத்தில் பச்சை குத்திக்கொண்டு தங்களை கோரமாக்கி கொண்டுள்ளனர். மேலும், அதை பாரம்பரியமாக எதிர்வரும் காலத்திலும் பின்பற்றி வந்துள்ளனர்.
பின்னர், 1960ம் ஆண்டு அரசாங்கம் இதற்கு தடை விதித்ததை தொடர்ந்து இந்த பாரம்பரியம் முடிவிற்கு வந்துள்ளது.
ஆனால், வயதான பெண்கள் இன்னும் முகத்தில் பச்சை குத்திய வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், தோல்லை நீட்டும் பெரிய காதணிகளை அணிந்துள்ளனர். தற்போதும், விரும்பத்துடன் சில சிறுமிகள் பச்சைக் குத்திக் கொள்வதாக கூறப்படுகிறது.
புகைப்படக்காரர் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுனரான Teh Han Lin, அண்மையில் மியான்மாருக்கு மேற்கொண்ட பயணத்தின் போது சின் பழங்குடி இன பெண்கள் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.