சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வாட்ஸ்ப்பால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. முக்கியமாக நமக்கு வரும் ஒரு சில மெசேஜ்களின் லிங்க்கில் வைரஸ் இருந்தால் அது நம்முடைய போனுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இலவச ரீசார்ஜ், சலுகைகள் என ஆசை காட்டும் வார்த்தை ஜாலங்களுடன் வரும் மெசேஜ்களில் ஒரு அபாயகரமான லிங்க் இருக்கும்.
இதை மட்டும் நாம் கிளிக் செய்தால் நம் போன் ஹேக் செய்யபட அதிக வாய்ப்புள்ளது.
இதிலிருந்து தப்புவது எப்படி?
ரீசார்ஜ் இலவசம், நெட் பூஸ்டர் இலவசம் போன்ற விடயங்களை நிறுவனங்கள் அளித்திருந்தால் அதில் பெரும்பாலும் லிங்க் இருக்காது.
அப்படி இருந்தால் அது பொய் லிங்க் தான்.
உதாரணத்துக்கு http://www.bsnl.in/ என்பது போல, போலி பி.எஸ்.என்.எல் லிங்க் http://bsnl.co/sim என்று இருக்கும். இதிலிருந்து அந்த லிங்க் மற்றும் மெசேஜ் போலி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இப்படி ஆபர் மெசேஜ் வந்தால் அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று அது உண்மைதானா என சோதனை செய்து கொள்ளலாம்.