பல்கேரியா நாட்டில் நடைபெற்றுவரும் படப்பிடிப்புக்கு இடையே கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காக சமீபத்தில் சென்னை வந்த நடிகர் அஜித் குமார், நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றதாகவும், அங்கு அவரது ‘உடன்பிறவா சகோதரி’ சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல்களை சில ஊடகங்கள் செய்தியாகவும் வெளியிட்டிருந்தன. இந்த தகவலை அ.தி.மு.க. தலைமை நிலையத்தால் நிர்வகிக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான வலைத்தளமும் உறுதிப்படுத்தி இருந்தது.
ஆனால், இன்றுகாலை மேற்கண்ட செய்திக்கு நேரெதிரான விளக்கத்தை நடிகரின் அஜித்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். அஜித் – சசிகலா இடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை. இதுதொடர்பாக, வெளியாகிவரும் பொய்யான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என அவர் கேட்டுகொண்டுள்ளார்.