கொரோனாவால் பாதித்து உயிரிழந்த நபரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பல அதிர்ச்சி தரும் தகவல்களை கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்படியே பத்திரமாக மூடப்பட்டு, பல்வேறு பாதுகாப்புகளுக்கு பின் தரையில் புதைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் முதல் முறையாக கொரோனாவால் இறந்தவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதித்து பலியான ஒருவரின் உடல் 15 மணி நேரத்துக்குப் பின், தடயவியல் துறை நிபுணர் மருத்துவர் தினேஷ் ராவ், உடற்கூராய்வு செய்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர் ராவ், கொரோனா பாதித்து உயிரிழந்த 60 வயது முதியவரின் உடலை கடந்த புதன்கிழமை உடற்கூராய்வு செய்துள்ளார்.
கொரோனா தொற்று ஒரு மனிதனின் உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை கண்டறிவதற்கு உடற்கூராய்வு செய்துள்ளார்.
இவர் தன்னந்தனியாக செய்த உடற்கூராய்வில் உயிரிழந்த கொரோனா நோயாளியின் கழுத்து, முகம், தோல் பகுதிகளில் அந்த நோயின் தொற்று இல்லை.
அவர்களது உள்ளுறுப்புகளான நுரையீரல், மூச்சுக்குழாய் பகுதிகளில் கூட கொரோனா தொற்று இல்லை. இப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எங்குமே கொரோனா தொற்று இல்லை.
ஆனால், ஆர்டி மற்றும் பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபரின் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் என்பது, பஞ்சு போல மென்மையாக இருக்கும். ஆனால், கொரோனாவால் உயிரிழந்த நபரின் நுரையீரல் தோலால் செய்யப்பட்ட பந்து போல கனமாக இருந்துள்ளது.
நுரையீரல் என்றால் வழக்கமாக 600 – 700 கிலோ கிராம்தான் இருக்கும், ஆனால் அந்த நபரின் நுரையீரல் மட்டும் 2.1 கிலோ இருந்துள்ளது.
தொடும் போது மென்மையாக இல்லாமல், மிகக் கடினமாக இருந்துள்ளது. ஆங்காங்கே ரத்தத் திட்டுக்கள் காணப்பட்டுள்ளன.
அதைப் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் இந்த நுரையீரலை அப்படி என்னதான் செய்திருக்கும்? என்று நினைக்கும் போது அதிர்ச்சியாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.