அண்மையில் கிராமங்களுக்கு படையெடுத்து வரும் நரிகள் தொடர்பான செய்திகளை தென்னிலங்கை ஊடகமொன்றில் வெளியாகியதைத் தொடர்ந்து அதன் விளைவாக ஹொறனை மீவானபலான பிரதேசத்திற்கு இன்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்டத்தில் மில்லனியா உள்ளிட்ட பல பகுதிகளின் காடுகளில் நரிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளதால். மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது.
தேவையான நடவடிக்கைகளை எடுக்க நான் இன்று இந்த குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றேன், வனவிலங்குத் துறை அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் சென்றேன். நரிகளால் கடித்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு குறித்து விசாரித்தேன்.
இந்த நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி போடவும், நரிகளை வனவிலங்குத் துறை அதிகாரிகள் மூலம் பிடிக்கவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிராமத்தை நோக்கி படையெடுத்த நரிகளால் ஒரு வயது குழந்தையும், 16 வயதான சிறுவனும் தாக்கப்பட்டனர்.
அதன் போது கிராமவாசிகள் ஒரு நரியை பிடித்து கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.