துர்கா தேவியின் ஒவ்வொரு அவதாரங்களையும் போற்றி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் நவராத்திரி பண்டிகை. அந்த வகையில் ஒன்பதாவது நாளான கடைசி நாளன்று துர்கா தேவியின் சித்திதாத்ரி அவதாரத்தை பக்தர்கள் வழிபடுவார்கள். நவராத்திரி பண்டிகையின் இறுதி நாள் தான் மகா நவமி என்னும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் துர்காவின் சித்திதாத்ரி வடிவம் வழிபடப்படுகிறது. சித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் தருபவள் என்றும் அர்த்தம். அதாவது அனைத்து சக்திகளையும் தருபவள் தான் சித்திதாத்ரி தேவி.இப்போது நவராத்திரியின் கடைசி நாளன்று சித்திதாத்ரி தேவியின் வடிவம், வழிபடும் முறை, அவருக்கான மந்திரம் மற்றும் எந்த நேரத்தில் பூஜை செய்வது நல்லது போன்றவற்றைக் குறித்து விரிவாக காண்போம்.
சித்திதாத்ரி தேவியின் வடிவம்
தேவி சித்திதாத்ரி சிவப்பு நிற புடவை அணிந்து, தாமரை மலரில் அமர்ந்து இருப்பார். நான்கு கைகளுடன் இருப்பார். அதில் இடது கையில் கதை மற்றும் சக்கரம் கொண்டும், வலது கையில் தாமரை மற்றும் சங்கு ஏந்தியும் இருப்பார். சித்திதாத்ரி தேவியின் வாகனம் சிங்கம்.
சொல்லப்போனால் சிவபெருமான் துர்கா தேவியின் இந்த வடிவத்தை தான் வழிபாடு செய்து அனைத்து சக்திகளையும் பெற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என்று தேவி புராணம் கூறுகிறது.
நவராத்திரி நவமி திதி நேரம்
மகா நவமி திதி அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை 6.58 மணிக்கு தொடங்கி, அக்டோடர் 25 காலை 7.41 மணிக்கு முடிவடைகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளன்று ஊதா நிற உடை அணிந்து, சித்திதாத்ரி அம்மனுக்கு ஊதா நிற ஆடை உடுத்தி வழிபட்டால், அவரது அருள் கிடைக்கும்.
சித்திதாத்ரி பூஜை முறைகள்
நவராத்திரியின் எட்டு நாட்கள் முறையாக பூஜை செய்து, ஒன்பதாவது நாளன்று சித்திதாத்ரி தேவிக்கு பூஜை செய்து வழிபட்டால், மனதில் இருக்கும் ஐயம் நீங்குவதோடு, பேரானந்தத்தை அனுபவிக்கக்கூடும்.
* சித்திதாத்ரி தேவிக்கு பூஜை செய்ய ஆரம்பிக்கும் போது, முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி ஆரம்பிக்க வேண்டும். இதனால் பூஜையை எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாக முடிக்க முடியும்.
* அதன் பின் சித்திதாத்ரி தேவிக்கான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
* பின்பு கந்தம், பூ, தீபம், சுகந்தம், நிவேத்யம் ஆகியவற்றைக் கொண்டு பஞ்சோபச்சார பூஜை செய்ய வேண்டும்.
* சித்திதாத்ரி தேவிக்கு பிடித்த கீர்/பாயாசம் மற்றும் பஞ்சாமிர்தத்தை நிவேத்தியம் செய்யுங்கள்.
* இறுதியில் கற்பூரம் காண்பித்து, மனதார சித்திதாத்ரி தேவியை வேண்டி வணங்குங்கள்.
* அதன் பின் தேவிக்கு படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சித்திதாத்ரி தேவிக்கான பூஜை மந்திரம்
“ஓம் தேவி சித்திதத்ராய் நம”
சித்த காந்தர்வ யக்ஷத்யிரசுரீராமாரைரபி |
சேவ்யமன சதா பூயாத் சித்திதா சித்தாய்தினி ||
யா தேவி சர்வபுதேஷு மா சித்திதத்ரி ரூபேனா சம்ஷ்டிதா |
நமஸ்தஸ்ஸாய் நமஸ்தாசாய் நமஸ்தாசாய் நமோ நம ||