நாட்டில் பெடரல் முறைக்கோ, புதியதொரு அரசாங்கத்திற்கோ அல்லது ஏனைய பிரச்சினைகளுக்கோ இனி இடமிருக்காது என எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் எதிர்பார்ப்பது நாட்டில் இன்னொரு பயங்கரவாதத்தையோ அல்லது, அமைதியற்ற சூழ்நிலையையோ அல்ல.
இனம் மதம் வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழும் சூழ்நிலை ஏற்பட வேண்டும். இதுவே எமக்கு வேண்டும் என தெரிவித்தார்.
சிறந்த அமைச்சுப் பதவிக்கு தாங்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தேசிய அரசாங்கம் 5 வருட காலத்திற்கு தொடரும் என்ற கருத்து உண்மையில் நல்லதொரு விடயம் எனவும், கட்சிக்குள் ஜனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் கட்சியின் மத்தியக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாம் தெரிவித்துக்கொள்வது யாதெனில் “கட்சியை பிளவுபடுத்தாமல் ஐக்கிய தேசிய கட்சி இல்லாத தனியாட்சியினை அமைக்க கட்சியின் கொள்கைகளுடன் இணைய முன்வருமாறு புதுவருட கோரிக்கையாக முன்வைக்கப்படுகின்றது” எனவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.