குருணாகல் – மஹவ பிரதேசத்தில் இருந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாட்டுக்குச் சென்று அங்கவீனமுற்ற நிலையில் நாட்டுக்கு வந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் தொடர்பாக தெரியவந்துள்ளது.
மஹவ – பாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த பத்மினி ஸ்வர்ணலதா என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு அங்கவீனமுற்று உள்ளார்.
அவர் தனது குடும்ப வறுமை நிலையை கருத்தில் கொண்டு 2011 ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அவர் அண்மையில் மீண்டும் நாட்டிற்கு அங்கவீனமுற்றே திரும்பியுள்ளார்.
இவரின் இந்த நிலை காரணமாக தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிலைமை தொடர்பாக இதுவரை எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
குறித்த பெண் தனது இந்த நிலையை கருத்தில் கொண்டு காப்புறுதி இழப்பீட்டை பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனத்தில் எடுத்து காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது.