கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் மூடப்படவுள்ளது.
குறித்த பணியகம் ஜனவரி முதலாம் திகதி முதல் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடமே மூடப்படவுள்ளது.
விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வெளிநாட்டு தொழிலுக்காக புறப்படும் இலங்கையர்கள் குறித்த பதிவினை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகங்களில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.