Loading...
விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர்.
அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது.
Loading...
சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான்.
எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் விக்னங்கள் (தடைகள்) நீங்குவதோடு, சூரியனின் அருளும், ஆத்ம பலனும், ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கும்.
Loading...