கனடாவில் ஹாக்கி கிளப் ஒன்றைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வலிப்பு வந்து தவிக்கும் நிலையிலும், அவனை சூழ்ந்து நின்றுகொண்டு இளைஞர்கள் சிலர் சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோவில் நடுங்கும் அந்த இளைஞனுக்கு உதவாமல், சுற்றி நிற்கும் இளைஞர்கள் அவன் தலைமீது தண்ணீரை ஊற்றுவதும், சிரிப்பதும், வீடியோ எடுப்பதுமாக உள்ளனர்.
அத்துடன் கொரோனா நேரத்தில் அவர்களில் யாரும் சமூக இடைவெளியைப் பின்பற்றியதாகவோ, மாஸ்க் அணிந்ததாகவோ தெரியவில்லை.
அந்த வீடியோவைப் பார்த்த மருத்துவர் ஒருவர், அந்த இளைஞனின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகும் வரையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார் பதிக்கப்பட்ட இளைஞனின் தந்தை.
பாதுகாப்பு கருதி அந்த இளைஞனின் பெயரோ, புகாரளித்த அவரதுதந்தையின் பெயரோ வெளியிடப்படவில்லை.
கால்கரி ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த அந்த இளைஞர்களின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதும் ஹாக்கி அணிகளின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான Kevin Kobelka கால்பந்து கூட்டமைப்பை தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
https://www.cbc.ca/player/play/1811618883542/