கண்களில் வரும் முக்கியமான நோய்களைப் பற்றி தெரியுமா? அதிகபட்சம் மாலைக் கண் நோய் மற்றும் கேடராட்க் பற்றி தெரிந்திருப்பீர்கள்.இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்.
க்ளாக்கோமா-கண்களிலுள்ள ஆப்டிக் நரம்புகள்தான் பார்வைப் பற்றிய தகவல்களை மூளைக்கு அனுப்பும். இந்த ஆப்டிக் நரம்புகள் சேதமடைந்தால் உண்டாவதுதான் க்ளாக்கோமா. இரத்த அழுத்தம் அதிகமாகும்போது இத்தகைய பாதிப்புகள் உண்டாகலாம்.
கஞ்சக்டிவிடிஸ் – கண்களில் வெள்ளைப் பகுதில் உள்ள திசுக்களில் உண்டாகும் பாதிப்பினால் இந்த நோய் உண்டாகிறது. இதனை ” பிங்க் ஐ” என்று சொல்வார்கள். காரனம் கண்களிலுள்ள வெள்ளைப் பகுதி பிங்க் நிறத்தில் மாறும்.
மேகுலார் சிதைவு – Macular degeneration கண்களிலுள்ள ரெட்டினாவின் பின்பகுதியிலுள்ள மேகுலார் என்று பகுதி நுண்ணிய பொருளையும் துல்லியமாக பார்க்க உதவும். அந்த பகுதி சிதைவுறும்போது கண் பார்வை இழக்க நேரிடும். அமெரிக்காவில் அதிக வயதானோர் இந்த பிரச்சனையால்தான் பார்வை இழக்கின்றனர். இதற்கு பெயர் மேகுலார் டிஜெனரேஷன்.
ரெடினல் பிரிவு – Retinal detachment ரெட்டினா பதிந்திருக்கும் இடத்திலிருந்து விலகும்போது சரியான சிக்னல் கிடைக்காமல் பார்வை தெரியாமல் போகும். லென்ஸும் தன் இடத்திலிருந்து விலக ஆரம்பிக்கும்.
கேடராக்ட் – கேடராக்ட் பெரும்பாலான வயதானவர்களுக்கு வரக் கூடியது. லென்ஸில் புகைப் போல் பெருகும் திசுக்களால் கண்பார்வை குறிந்து இறுதியில் பார்வையை இழக்க நேரிடும்.