கனமான பைகளுடன் அமெரிக்க கனடா எல்லையில் நடமாடிய இருவர், அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினரைக் கண்டதும் கனடாவுக்குள் நுழைந்தனர்.
தகவலறிந்ததும் கனடா பொலிசார் மோசமான வானிலை நிலவிய சூழலிலும் விரைவாக அந்த இருவரையும் கண்டுபிடித்து கைதுசெய்தனர்.
சிக்கியவர்கள் Jason Arkinstall மற்றும் Lawrence Dwyer என்னும் இருவர். இதற்கிடையில், கனடா அமெரிக்க எல்லையில் கார் ஒன்று விரைந்து செல்வதை கவனித்த அமெரிக்க பொலிசார் அந்த காரை மடக்கி அதிலிருந்தவரை கைது செய்தனர்..
அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட பொலிசார், கனடாவுக்குள் தப்பியோடிய Jason Arkinstall மற்றும் Lawrence Dwyer இருவரும் வீசிச்சென்ற பைகளை கைப்பற்றினர்.
அந்த பைகளுக்குள் 38.1 கிலோகிராம் கொக்கைன் மற்றும் 89.8 கிலோகிராம் மெத் என்னும் போதைப்பொருளும் இருப்பது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு 2.8 மில்லியன் டொலர்கள் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்டு பொலிசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.