வடக்கு பிரான்சின் கடற்கரையில் புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி இரண்டு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
டன்கிர்க் அருகே சுமார் 2 கி.மீ தூரத்தில் கப்பல் ஆபத்தான நிலையில் இருப்பதை அவ்வழியாக படகில் சென்றவர்கள் கண்டு பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நான்கு பிரான்ஸ் கப்பல்கள், ஒரு பெல்ஜிய ஹெலிகாப்டர் மற்றும் பிரான்ஸ் மீன்பிடி படகு ஆகியவை மீட்பு மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டன.
இதில் ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகளும், ஒரு ஆணும் பெண்ணும் இறந்துள்ளனர். நான்கு பேரும் ஈரானைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
மேலும் மீட்க்கப்பட்ட 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான சம்பவத்தை குறித்த விசாரிக்கும் பிரான்ஸ் அதிகாரிகளுக்கு முழுமையான ஆதரவையும் வழங்குவோம்.
மேலும் இந்த ஆபத்தான பயணங்களுக்கு உதவுவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களை இரையாக்கும் இரக்கமற்ற குற்றக் கும்பல்களை கண்டுபிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்
படகு மூழ்கியதற்கான காரணத்தை அடையாளம் காண டன்கிர்க்கில் உள்ள அரசு வழக்கறிஞரால் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.