பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களாக இருந்தாலும் சரி, மென்பொருட்களாக இருந்தாலும் சரி ஏனைய நிறுவனங்களை விடவும் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.
இதற்கு காரணம் தனித்துவம் மற்றும் பாதுகாப்பு என்பனவாகும்.
இப்படியிருக்கையில் தற்போது ஆப்ஸ் ஸ்டோரிற்கான கட்டணத்தினை ஆப்பிள் நிறுவனம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்தியா உட்பட மேலும் சில நாடுகளில் இக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருகின்றது.
ஒவ்வொரு நாட்டிலுமுள்ள வரி மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் பெறுமதி என்பவற்றினைக் கருத்திற்கொண்டு இக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக் கட்டண அதிகரிப்பானத பிரேஸில், கொலம்பியா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் அடுத்துவரும் சில தினங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.