பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் கிளவுட் ஹேமிங் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முற்றிலும் இலவசமாக அறிமுகம் செய்யப்படவுள்ள இச் சேவையில் பயனர்கள் தமது ஹேம்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்பதுடன், விளையாடி மகிழவும் முடியும்.
Asphalt 9: Legends மற்றும் WWE SuperCard ஆகியவற்றினை போன்ற ஹேம்களை இவ்வாறு பேஸ்புக் கிளவுட் பிளார்ட்போமில் பயன்படுத்த முடியும்.
அதாவது இக் ஹேம்களை விளையாடுவதற்காக தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முன்னர் இவ்வாறான சேவைகளை Google நிறுவனத்தின் Stadia, Nvidia நிறுவனத்தின் GeForce Now மற்றும் Amazon நிறுவனத்தின் Luna ஆகிய ஹேம்கள் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள இப் புதிய கிளவுட் ஹேமிங் சேவையினை அன்ரோயிட் அப்பிளிக்கேஷன் மற்றும் இணைய உலாவிகளில் பயன்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.