ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 367பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று 4 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்திருக்கக்கூடிய நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இதன் தாக்கமானது மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில், கடந்த மார்ச் மாதம் 23 அன்று அறிவிக்கப்பட்ட முழு முடக்க உத்தரவின் போது ஒரு நாள் உயிரிழப்பு 54ஆக இருந்தது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 367 பேர் உயிரிழந்துள்ளனர். இது இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். முன்னதாக மே 27-ம் திகதி அதிகபட்சமாக 422 பேர் உயிரிழந்திருந்தனர்.
மட்டுமில்லாமல் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டு 28 நாட்களில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 45,365 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 22,885 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 9,17,575 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக இறப்புச் சான்றிதழ்களில் கோவிட் -19 குறிப்பிடப்பட்ட இறப்புகளைக் கணக்கிடும் மற்றொரு தனித்தனி புள்ளிவிவரங்கள், முதன்முறையாக வைரஸால் இங்கிலாந்தின் இறப்பு எண்ணிக்கை 60,000 ஐத் தாண்டியது என குறிப்பிட்டிருந்தது.
ஒக்டோபர் 16 ஆம் தேதிக்குள் இந்த அளவுகோலின் அடிப்படையில் 61,116 கோவிட் இறப்புகள் ஏற்பட்டதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.