தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதனை தொடர்ந்து அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
ஜெயலலிதா மருத்துவமனையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்றபோது அது தொடர்பான புகைப்படமோ, வீடியோக்களோ வெளியாகவில்லை.
அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டது.
ஆனால் அந்த அறிக்கையில் உள்ளவற்றை எதிர் கட்சியினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் யாரும் நம்பவில்லை.
இந்நிலையில், பிரபல தமிழ் வாரஇதழ் ஜெயலலிதாவின் கால்கள் எங்கே என்றும் அவரது பயோடேட்டாவில் அவரின் உயரம் 5.5 அடி என்றும், சவப்பெட்டியின் அளவு 6 அடி என்றும் ஜெயலலிதா உடல் இருப்பதோ 3 1/2 அடி என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனால் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு உண்மைகள் வெளிவராமலே இருப்பது வேதனைக்குரியது.