பிரித்தானியாவில் தொடர்ந்தும் பல பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கிறிஸ்மஸ் சந்தைகள் மற்றும் வணிக மையங்களை இலக்கு வைத்து இவ்வாறு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கனரக வாகனம் ஒன்றை நத்தார் சந்தை தொகுதி ஒன்றில் மோதச்செய்து பாரிய தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த அதேவேளை, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில், இது போன்ற தாக்குதல்கள் பிரித்தானியாவிலும் மேற்கொள்ளகூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, பிரித்தானியாவின் பல பாகங்களிலும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் சிவில் உடையணிந்து மக்களோடு மக்களாக இருந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள போதிலும், மக்கள் பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.