காலி அக்மீமன தொட்டகொட பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் தெனுர கே. சிங்காராச்சி தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்லவிருந்த இந்த நபர் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளரான இந்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் கொழும்பு துறைமுகத்தின் கப்பல் தடாகம், மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை, பேலியகொட மீன் சந்தை ஆகிய கொரோனா கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர் அல்ல என காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் கூறியுள்ளார்.