மனிதம் என்பது பெரும்பாலும் மரித்து விட்டது. உலகெங்கிலும் சர்வாதிகாரிகள் ஆங்காங்கே இருந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மக்களை கடுமையாக வேலை வாங்குவார்கள்.
அந்தவகையில் உலகையே அச்சுறுத்திய ஹிட்லரிடம் லட்சக்கணக்கான அடிமைகள் வேலை செய்தனர். அதில் யாரேனும் சற்று சோர்வாக வேலை செய்தால் உடனடியாக அங்கு கண்காணிப்பிலிருக்கு அதிகாரிகள் சுட்டுவிடுவார்களாம்.
இதனால் அருகிலிருப்பவர்கள் அவருக்கு உதவவோ, கண்ணீர் வடிக்கவோ கூட மாட்டார்கள். தங்களையும் சுட்டு விடுவார்களோ என்று பயந்து வேகவேகமாக வேலை செய்வார்களாம்.
இந்த நிலை இன்னும் மாறவில்லை, தற்போதும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேறு வடிவத்தில் தொடர்கிறது. திறமையுள்ளவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்ற நிலை தான் தற்போதைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலை உள்ளது.
ஒருவர் எப்போதுமே திறமையான பணியாளர்களாக தன்னை நிருபித்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் எப்போதும் நிறுவனங்களிலிருந்து தூக்கப்படலாம். இவருக்காக மற்ற ஊழியர்கள் நியாயம் கேட்கவோ, வருந்தவோ கூட முடியாது.
ஏனெனில் அடுத்த அவர்களுக்கும் இதே நிலை வரலாம் என்ற பயத்தால் இன்னும் கடுமையாக உழைக்கிறார்கள்.
காலங்கள் மாறினாலும் அடிமைத்தனம் மாறவில்லை, அதன் வடிவங்கள் மட்டுமே மாறியுள்ளது.